1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (12:47 IST)

கேரளாவுக்கும் பொங்கல் விடுமுறை: முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தில் பொங்கல் விடுமுறை 5 நாட்களில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவிலும் பொங்கல் விடுமுறை விட வேண்டும் என கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
கேரளா எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். எனவே அவர்களுக்காக அந்த ஆறு மாவட்டங்களில் பொங்கல் திருநாள் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்
 
இந்த கோரிக்கையை ஏற்று கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் பொங்கல் விடுமுறை விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்