பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்: கள்ளச்சந்தையில் விற்றால் நடவடிக்கை.. அமைச்சர் மனோ தங்கராஜ்
இன்று முதல் பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என்றும் கள்ள சந்தையில் அதிக விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்
பால் தட்டுப்பாடு குறித்தும் கள்ள சந்தையில் அதிக விலைக்கு பால் விற்பனை ஆகி வருவது குறித்தும் வெளியான புகாரின் அடிப்படையில் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:
"இன்று காலை அனைத்து முகவர்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். பால் வினியோகத்தை நேரடியாக கண்காணித்து ஒவ்வொரு பகுதிக்கும் வாகனங்கள் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது
சென்னையில் மழை பாதிப்புகள் காரணமாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
Edited by Siva