திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ளதை அடுத்து ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா? அல்லது கட்டுப்பாடுகளை தளர்த்துவதா? என்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார்
 
இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இந்த ஆலோசனையில் தமிழகத்தில் ஜூன் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீடிப்பது அல்லது தளர்வுகள் அறிவிப்ப்து குறித்து முடிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக்கு பின் முதல்வரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மேலும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில கடைகளை திறக்க அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.