செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (22:18 IST)

தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய விஜய் வசந்த் எம்பி: என்ன காரணம்?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கன்னியாகுமாரி எம்பி விஜய் வசந்த் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
கொரோனா தற்காப்பு மற்றும் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், முகக் கவசம், கையுறை,சானிடைசர் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை. தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் குமரி மாவட்ட மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
 
மேலும் இன்னொரு டுவிட்டில் நாகர்கோவில் கிறிஸ்து நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டேன்.  பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தேன். மேலும் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு தரமான முறையில் பொருட்கள் வழங்க வேண்டுமென கேட்டு கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.