1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Palanisamy discussed with district collectors

அடுத்தக்கட்ட தளர்வுகள் என்ன? நடவடிக்கைகள் என்ன? – ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Tamilnadu
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் அடுத்தக்கட்ட தளர்வுகள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜனவரி மாதம் வரை அறிவிக்கப்பட்ட தளர்வுகள் இரண்டு நாட்களில் முடிவடைகின்றன.

இதனால் பிப்ரவரி மாதம் முதலாக அறிவிக்கப்பட உள்ள தளர்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒரு பக்கம் வீரியமிக்க கொரோனா பரவுதல் போன்ற ஆபத்துகள் இருந்தாலும், மறுபுறம் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருவதால் தளர்வுகள் அளிப்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
நான் ராமதாஸ் ஆளு.. இட ஒதுக்கீடு குடுங்க! – ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த பாமக!