புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:20 IST)

தகனம் செய்யும் முன் உயிர்பிழைத்த பெண்! – அர்ஜெண்டினாவில் ஆச்சர்யம்!

அர்ஜெண்டினாவில் இறந்த பெண் ஒருவர் தகனம் செய்வதற்கு சில நிமிடங்கள் முன்னதாக உயிர்பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் மணி நேரத்திற்கு பலர் இறக்கும் நிலையில் இறந்து விட்டதாக புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ செல்லும்போது திடீரென சிலர் உயிர்பிழைக்கும் சம்பவங்களும் அபூர்வமாக நடந்து வருகின்றன. அவ்வாறான சம்பவம் ஒன்று அர்ஜெண்டினாவில் நடந்துள்ளது.

அர்ஜெண்டினாவில் வாழ்ந்து வந்த வயதான பெண்மணி ஒருவர் இறந்துவிட அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி தகனம் செய்ய கொண்டு சென்றுள்ளனர். அப்போது பெண்ணின் உடலில் அசைவுகள் தெரிவதை பெண்ணின் மகள் கவனித்துள்ளார். உடனடியாக அனைவருக்கும் அதை தெரியப்படுத்த, அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகனம் செய்ய சில நிமிடங்களே இருந்த நிலையில் பெண் உயிர்பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.