1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. OPS son wishes for sasikala health

சசிக்கலாவுக்கு வார்னிங்கோடு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ் மகன்! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Tamilnadu
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஓபிஎஸ் மகன் ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆக உள்ள நிலையில் அவரது வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மையார் திருமதி சசிகலா நடராஜன் பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல் நலம் பெற்று அறம்சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் இது அரசியல் சார்ந்த பதிவல்ல என்றும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் இட்ட பதிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர் – குடியரசு தலைவர் உரையை புறக்கணித்த 16 கட்சிகள்!