ரூ. 111க்கு ரீசார்ஜ் செய்தால் 58 நாட்கள் வேலிடிட்டி.. ஜியோ அறிமுகம் செய்யும் புதிய திட்டம்...
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ, தனது 53 கோடிக்கும் அதிகமான பயனர்களில் குறிப்பாக இளம் தலைமுறையினரையும் கேம் பிரியர்களையும் கவரும் வகையில் ரூ. 111 மதிப்பிலான புதிய சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பயனர்கள் இணைய சேவையுடன் கேமிங் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை எளிதாக பெற முடியும். இந்த ரூ. 111 ரீசார்ஜ் திட்டத்தில் 'கேம் பேக்' மற்றும் 'யூத் பேக்' என்ற இரு விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனர்கள் ரீசார்ஜ் செய்யும்போது தங்களுக்கு தேவையான பேக்கை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதில் 58 நாட்கள் வேலிடிட்டி கொண்ட கேம் பேக், மொபைல் கேம் விளையாடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மற்றொரு விருப்பமான 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட யூத் பேக்கில் ஜியோ கேம்ஸ் , ஃபேன்கோட் மற்றும் ஸ்நாப்சாட்+ ஆகிய செயலிகளின் சந்தாக்கள் அடங்கியுள்ளன.
ஜியோ கேம்ஸ் மூலம் பிரீமியம் கேம்களை விளையாடவும், ஃபேன்கோட் மூலம் விளையாட்டு போட்டிகளை ஸ்மார்ட்போனிலேயே நேரடியாக கண்டு களிக்கவும் முடியும். குறைந்த விலையில் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் இத்திட்டம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

