ஊரு ஃபுல்லா பேரிகார்ட்!.. ஓவர் பில்டப்!.. நிறுத்துங்க மகாராஜா!.. புளூசட்டமாறன் நக்கல்..
இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றோடு முடிவடையும் நிலையில் முதல்வர் விஜய் இன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏற்கனவே அந்த தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் இன்று தாராபுரத்தில் சுமார் 30 இடங்களில் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்கவிருக்கிறார்.
தாராபுரத்தின் மேட்டுக்கடை முதல் தாசார்புரம் வரை சுமார் 114 கிலோ மீட்டர் தொலைவிற்கு விஜய் ரோட் ஷோ செய்கிறார். மதியம் ஒரு மணிக்கு தொடங்கும் பிரச்சாரம் மாலை முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஒருபக்கம் விஜயின் வாகனத்தை மக்கள் நெருங்கி வந்து விடக்கூடாது என்பதற்காக விஜய் செல்லும் சாலை அனைத்திலும் பேரிகார்ட் போடப்பட்டிருக்கிறது..
ஏற்கனவே முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதியில் ரோட் ஷோ செய்தபோதும் இதே போல்தான் அவர் செல்லும் வழி சாலை முழுவதும் பேரிகார்ட் போடப்பட்டிருந்தது. அதுவே அப்போது விமர்சனத்திற்கு உள்ளானது. இப்போது தாராபுரத்திலும் பேர் கார்டுகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரபல சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் புளூ சட்டமாறன் யாரும் எட்டிப் பார்க்காத இடங்களில் கூட எதற்கு இருபுறமும் இத்தனை தடுப்புகள்? இதெல்லாம் மக்கள் வரிப்பணம்தானே? உலகின் மாபெரும் மன்னர்கள் கூட இத்தனை பில்டப் காட்டியது இல்லை.. உண்மையில் இதுதான் மன்னராட்சி.. இனியாவது கிலோமீட்டர் கணக்கில் பேரிகார்டு வைப்பது நிறுத்தக மகாராஜா! என பதிவிட்டிருக்கிறார்.