1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM discuss about rain rescue operation

எந்த மழை வந்தாலும் மக்களை காப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

Mk Stalin
எந்த மழை வந்தாலும் மக்களை காப்போம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேலும் சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார் 
 
அப்போது எந்த மழை வந்தாலும் என்ன காற்றடித்தாலும் அதை சமாளிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும் அனைத்து மாவட்டங்களில் அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மாண்டஸ் புயல் எதிரொலி: இதுவரை 15 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!