திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 9 டிசம்பர் 2022 (16:14 IST)

நாளை எங்கெங்கு விடுமுறை: வெளியாகி வரும் அறிவிப்புகள்!

மாண்டஸ் புயல் காரணமாக நாளை கல்வி நிலையங்களுக்கான விடுமுறை குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.


மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை மணிக்கு 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாளை கல்வி நிலையங்களுக்கான விடுமுறை குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய எட்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியல் நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.