1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (19:17 IST)

சென்னை-புதுவை செல்லும் சாலைகள் தடுத்து நிறுத்தம்: அதிரடி நடவடிக்கை

road1
சென்னையில் இருந்து புதுவை செல்லும் வாகனங்களும் புதுவையில் இருந்து சென்னை செல்லும் வாகனங்களும் கோட்டகுப்பம் என்ற பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை புதுவை இடையே மகாபலிபுரத்தில் தான் இன்று இரவு புயல் கரையை கடக்க இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி சூறாவளி காற்று மிக வேகத்தில் வீசி வருவதால் அந்த பகுதியில் அரசு போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் என்ற பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், புயல் கரையை கடக்கும் வரை கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 எனவே இன்று இரவு புதுவை செல்ல இருப்பவர்கள் பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
 
Edited by Mahendran