தொடர்புடைய செய்திகள்
- மாண்டஸ் புயல் எதிரொலி: | மாமல்லபுரத்தில் மின் இணைப்பு துண்டிப்பு!
- மாண்டஸ் புயல் எதிரொலி: நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
- சென்னை-புதுவை செல்லும் சாலைகள் தடுத்து நிறுத்தம்: அதிரடி நடவடிக்கை
- புயலின் போது மின் இணைப்பு துண்டிக்கப்படுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி
- மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!
மாண்டஸ் புயல் எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு!
மாண்டஸ் புயல் காரணமாக ஏற்கனவே பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புயல் காரணமாக கனமழை தமிழகம் முழுவதும் பெய்து வருவதால் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்களில் உள்ள கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய தொழில் பழகுநர் பதவிக்கான தேர்வு புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது இந்த தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
