வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (14:38 IST)

10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை.. இளைஞர் போக்சோ வழக்கில் கைது !

arrest
திருவாரூர் அருகே 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, தீனதயாளன் என்ற இளைஞரை போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் காட்டூர் வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு ஒரு மகள் (15) உள்ளார். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

தந்தை மூர்த்தி 2 ஆண்டுகளுக்கு முன் மறைந்த நிலையில், தாயும் மகளும் வசித்து வந்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் தீன தயாளன் (19) மாணவியுடன் பழகி வந்ததாகவும், இதற்கிடையில்  நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி, மாணவியின் தாய் மகேஷ் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்ததன் பேரில், தீனதயாளன் மீது வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

 
Edited by Sinoj