வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (11:36 IST)

நடிகர் போண்டா மணியிடம் ₹1 லட்சம் திருட்டு - ஒருவர் கைது

bondamani
நடிகர் போண்டா மணியிடம் ஒரு லட்ச ரூபாய் திருடிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
சமீபத்தில் காமெடி நடிகர் போண்டாமணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தனுஷ், விஜய்சேதுபதி உள்பட பல திரையுலக பிரபலங்கள் நிதி உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் போண்டா மணியின் ஏடிஎம் கார்டில் இருந்து ரூ.1 லட்சம் திருடியதாக ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் இருந்தபோது அவரிடம் நட்பாக பழகி பல்வேறு உதவிகளை ராஜேஷ் செய்ததாகவும் இதனை அடுத்து போண்டாமணியின் மனைவியிடம் மருந்து வாங்க வேண்டும் என்று அவருடைய ஏடிஎம் கார்டை வாங்கிய நிலையில் அதிலிருந்து பணத்தை ராஜேஷ் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இதனை அடுத்து போண்டா மணி அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Edited by Mahendran