1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Congress not invited sasitharoor

சசிதரூரை வரவேற்காத தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள்: என்ன காரணம்?

sasitharoor
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். 
 
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ஆதரவு யாருக்கும் இல்லை என வெளிப்படையாகக் கூறினாலும், சோனியா காந்தியின் ஆதரவு மல்லிகாஜூனே கார்கேவுக்கு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் சசிதரூர் தனக்கு ஆதரவு தேடி ஒவ்வொரு மாநிலமாக பயணம் செய்து வரும் நிலையில் இன்று அவர் தமிழகத்திற்கு வருகை தந்தார். சத்தியமூர்த்திபவன் கட்டிடத்திற்கு அவர் வருகை தந்த போது அவரை முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்கவில்லை என கூறப்படுகிறது
 
இதனை அடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தான் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது
 

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சுங்கச்சாவடியில் 54 பேர் பணிநீக்கம் - சீமான் கண்டனம்!