1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (13:25 IST)

முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..!

mukesh ambani
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தார்
 
இதனை அடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் அதே நபர் போன் செய்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் மருத்துவமனையை தகர்க்க போவதாக கூறி மிரட்டல் விடுத்தார் 
 
இதனையடுத்து அந்த நபர் பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா என்ற மாவட்டத்தில் இருந்து பேசியது கண்டு பிடிக்கப் பட்டது. இதனையடுத்து அந்த நபர் ராகேஷ் குமார் மிஸ்ரா என்பதை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர்
 
தற்போது பீகாரில் இருந்து அந்த நபர் மும்பைக்கு அழைத்து வரப்படுவதாகவும், அதன்பிறகு மும்பை போலீசார் விசாரணை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran