தொடர் போராட்டம்: புதுவையில் மின்வாரிய ஊழியர்கள் நள்ளிரவில் கைது
புதுவையில் மின் வாரியத்தை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
புதுவை அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நேற்று விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
மின் வாரியத்தை தனியார் மயமாக்குவதை எதிர்த்து போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்டோர் திடீரென நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுவையில் போராட்டத்தை கைவிட காவல்துறையினர் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் போராட்டத்தை கைவிட ஊழியர்கள் மறுத்ததாகவும் இதனையடுத்து போலீசார் மற்றும் துணை இராணுவப் படையினர் போராட்டம் செய்த மின்வாரிய ஊழியர்களை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva