தொடர்புடைய செய்திகள்
- மருத்துவமனையில் படுத்துக்கிட்டே கில்லி படம் பார்க்கும் வசதி.. துவங்கி வைத்த அமைச்சர்!..
- இதனாலதான் விஜய்கிட்ட நான் சீட் கேக்கல!.. ஓப்பனாக பேசிய சஞ்சய்!..
- அரசு வழக்கறிஞர்கள் நியமன வழக்கு.. முதல்வர் விஜய், அமைச்சர் ஆனந்த் பெயர் நீக்கம்...
- குறை சொல்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும்!.. விஜய்க்கு ஆதரவாக வரலட்சுமி சரத்குமார்!...
- முதல்வர் விஜய்யை சந்தித்த சிவகார்த்திகேயன்.. ஆங்கர் முதல் கோட் வரை மலரும் நினைவுகள்,...
மக்கள் தொகை கணக்கெடுப்பு சுய விவரங்களை பதிவு செய்தார் முதல்வர் விஜய்... பதிவு வைரல்..
மக்கள் தொகை கணக்கெடுப்பு சுய விவரங்களை தமிழக முதல்வர் விஜய் பதிவு செய்துள்ள சமூக வலைத்தள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது..
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் சுய விவரம் பதிவு செய்யும் முறை இன்று தொடங்கிய நிலையில் தமிழக முதல்வர் விஜய் இதற்கு முன்னுதாரணமாக முதல் நாளே தனது சுயவிவரத்தை பதிவு செய்துள்ளார்.. இதுகுறித்து அவரது பதிவு இதோ:
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
