விஜய் முதல்வரான முதல் நாள் தரக்குறைவாக விமர்சனம்.. மாரிதாஸ் அதிரடி கைது...
தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் அவரது 'தமிழக வெற்றிக் கழக' அரசைச் சமூக வலைத்தளங்களில் அவதூறான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சித்து வந்த பிரபல யூடியூபர் மாரிதாஸ், காவல்துறையினரால் மதுரையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முந்தைய நாள் வரை திமுக மற்றும் அதிமுகவை மட்டுமே டார்கெட் செய்து வந்த இவர், விஜய் சிஎம் பதவியேற்ற அடுத்த அரை மணி நேரத்திலிருந்தே தவெக ஆட்சியை நோக்கித் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சனக் கணைகளை தொடுக்க தொடங்கினார்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பதவிக்குக் கூட குறைந்தபட்ச மரியாதை தராமல், நாகரிகத்தின் எல்லையைத் தாண்டி அவன், இவன், போடா, வாடா எனப் பேசியது நடுநிலையாளர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சவுக்கு சங்கர் எவ்வளவு கடுமையான கோணத்தில் கொள்கை ரீதியாக விமர்சித்தாலும் எப்போதும் முதலமைச்சருக்கான மரியாதையைக் கொடுத்துத்தான் பேசுவார். ஆனால், மாரிதாஸோ மரியாதை கிலோ என்ன விலை என்று கேட்கும் பாணியில் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டதால் இந்தச் சட்டப்பூர்வ நடவடிக்கை பாய்ந்துள்ளது.
Edited by Siva
