ஆசைபட்டது எதுவும் நடக்கல!.. அதிருப்தியில் செங்கோட்டையன்?!.. தவெகவில் நடப்பது என்ன?..
எம்ஜிஆர் படத்திலிருந்து அதிமுகவில் இருந்தவர் செங்கோட்டையன். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தொடர்ந்து பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பலமுறை அமைச்சராக இருந்துள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் சொன்னதால் கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். இதையடுத்து தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றதையடுத்து செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் இவருக்கு நிதித்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அதன்பின் அது மாற்றப்பட்டு வருவாய்த்துறை கொடுக்கப்பட்டிருக்கிறது..
ஆனாலும் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இலகா ஒதுக்கட்டில் தனக்கு முன்னுரிமை கொடுக்காதது, தனது ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காதது, தன்னுடன் கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்காதது போன்ற விஷயங்களுக்கு செங்கோட்டையன் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் தவெக தலைமை நிராகரித்து வருவதால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

