1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai paadi bridge theft incident

சென்னை மேம்பாலத்தில் அடுத்தடுத்து வழிப்பறி! – காவல்துறை தீவிர விசாரணை!

Chennai
சென்னை பாடி மேம்பாலத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து வழிப்பறி கொள்ளை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாடி மேம்பாலம் பகுதியில் நேற்று கேட்டரிங் ஊழியரான ருத்ரா என்பவர் பெட்ரோல் இல்லாததால் தனது இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ருத்ராவை நிர்வாணப்படுத்தி கொள்ளையடித்துள்ளனர்.

அதேபோல பாடி மேம்பாலம் அருகே 100 அடி சாலையில் லிப்ட் கேட்பது போல பரத் என்பவரின் வாகனத்தை நிறுத்தியும் பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திடீர் கொள்ளை கும்பலை தேடி பிடிக்க சென்னை போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பிரபல யூட்யூபரை காதலித்த கல்லூரி மாணவி! – கருத்து வேறுபாட்டால் தற்கொலை!