1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. people crowd in chennai koyambedu bus stand

சென்னை கோயம்பேட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

சென்னை
நாளை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதாலும் அதனை அடுத்த நாள் இரண்டாவது சனிக்கிழமை என்றாலும் அதனை அடுத்து ஞாயிறு என்பதாலும் தொடர்ச்சியாக 3 நாள் விடுமுறை உள்ளதை அடுத்து ஏராளமானோர் சொந்த ஊருக்குள் செல்வதற்கு தயாராகி வருகின்றனர் 
 
இதன் காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் குவிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே சென்னையில் இருந்து ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து துறை அறிவித்திருந்தது என்பதும் தேவைப்பட்டால் இன்னும் கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் தயாராக இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் இருந்து இன்று இரவு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சிறப்புப் பேருந்துகள் தேவையான இடம் குறித்த தகவலை அறிவித்தால் உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு