வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (12:02 IST)

சென்னையிலிருந்து வெளியேறும் ஃபோர்டு! – 4 ஆயிரம் பேர் வேலையிழப்பு?

சென்னை மறைமலைநகரிலிருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேற உள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மறைமலைநகர் பகுதியில் பிரபல கார் நிறுவனமான ஃபோர்டின் ஆலை பல காலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அங்கிருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பணி புரியும் 4 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மறைமலைநகரில் ஃபோர்டுக்கு மாற்றாக வேறு கார் நிறுவனத்தின் ஆலை செயல்பட அனுமதிக்கலாமா என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.