வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (10:57 IST)

தடையை மீறி விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணி! – சென்னையில் பரபரப்பு!

தமிழகத்தில் பொது இடத்தில் விநாயகர் சிலை வைக்க தடை உள்ள நிலையில் சென்னையில் இந்து முன்னணியினர் சிலை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பொதுவெளியில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இவ்வாறான தடை உள்ள நிலையில் இன்று தடையை மீறி இந்து முன்னணியினர் சென்னை தி.நகரில் விநாயகர் சிலை வைத்து வழிபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தடையை மீறி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.