திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (16:13 IST)

தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐஐடி மாணவி !

சென்னை ஐஐடி  மாணவி  ஒருவர் ரயில் தண்டவாளத்தில் சடலாமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளம்பெணொருவர் தலை, முகத்தில் ஆயம் ஏற்பட்டு, மர்மமான முறையில் சடலமானகக் கிடப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்க் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த மரணம் குறித்து போலீஸார் விசாரணையில்,உயிரிழந்த பெண் ஒடிஷா மா நிலத்தைச் சேர்ந்த மோகன் பதான் என்பவரின் மகள் மேகாஸ்ரீ என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 இவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும், டெல்லியில் எம்.டெக். பிஎச் டி முடித்தவர் என்றும், இவர் சென்னை ஐஐடியில்  3 மாத  ஆராய்ச்சிகள் படிப்புகள் வந்ததாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.