கரூரிலிருந்து தத்தகிரி புறப்பட்ட வேல் காவடியாத்திரை குழு
ஆடிகிருத்திகையையொட்டி கரூரிலிருந்து தத்தகிரி புறப்பட்ட வேல் காவடியாத்திரை குழு
கரூர் நகரத்தார் சங்க மக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும், கரூர் மாவட்டம், மாயனூர் செல்லாண்டியம்மன் ஆலயத்திலிருந்து வேல் காவடியை சுமந்து கரூர் நகரத்தார் மண்டபம் அடைந்து பின்னர் அங்கிருந்து நாமக்கல் மாவட்டம் தத்தகிரி முருகன் ஆலயத்திற்கு சென்று ஆடிக்கிருத்திகையை வருடா வருடம் வழிபடுவது வழக்கம், இந்நிலையில், காவடியாத்திரை குழு பாதயாத்திரையாக கரூர் நகரத்தார் சங்கம் வந்து அங்கு ஒய்வெடுத்து விட்டு தத்தகிரி புறப்பட்டு சென்றது. வழிநெடுகிலும், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம், கரூர் மாரியம்மன் ஆலயம் சென்று பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாமக்கல் மாவட்டம், தத்தகிரி புறப்பட்டு சென்றடைந்தது. வழிநெடுகிலும் மேள இசை வாசிக்க, பக்தர்கள் காவடியாத்திரைகுழுவினை தரிசித்து முருகன் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் நகரத்தார் சங்கம் சிறப்பாக செய்திருந்தது.