1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
  4. To make Akkaravadisal in amazing taste !!

அற்புதமான சுவையில் அக்காரவடிசல் செய்ய !!

Akkaravadisal
தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
பால் - ஒன்றரை லிட்டர்
வெல்லம் - இரண்டரை கப்
நெய் - அரை கப்
முந்திரி பருப்பு  -10
காய்ந்த திராட்சை - 20
ஏலக்காய் - 4
கிராம்பு - 2



செய்முறை:

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் பச்சரிசி எடுத்துக் கொள்ளவும். அதனுடன்அரை கப் பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும். இதனை லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த பின்னர் ஒரு முறை கழுவிக் கொள்ளவும். அதனுடன் ஒன்றரை லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளவும். குறைவான தீயில் வைத்து அரிசி பருப்பு மசிந்து வரும் வரை வேக வைக்கவும். பிறகு வெல்ல பாகு காய்ச்சுவதற்கு ஒரு பாத்திரத்தில் இரண்டரை லிட்டர் கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து ஓரளவு கொதித்ததும் தனியே எடுத்து வைக்கவும்.

அரிசி பருப்பு குழைந்த பின்னர் வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும். இதனை கலந்த பின்னர் 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். ஒரு பானில் 1 ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் சூடானதும் முந்திரி பருப்புகளை சேர்த்து லேசாக வறுக்கவும். அதனுடன் காய்ந்த திராட்சை சேர்த்து, உப்பி வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த முந்திரி திராட்சை அக்காரவடிசல் உடன் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து கலக்கவும். பின்னர் 3 ஏலக்காய் அல்லது 3 கிராம் லேசாக இடித்து சேர்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம். அற்புதமான சுவையான அக்காரவடிசல் தயார்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!