வியாழன், 19 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 பிப்ரவரி 2026 (20:51 IST)

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்!.. பிரிட்டன் அரசர் சார்லஸின் சகோதரர் கைது!..

epstein
சமீபகாலமாகவே Epstein Files என்கிற வார்த்தை சமூக வலைதளங்களில் பலரின் கண்ணிலும் அடிபடுகிறது. அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் ஒரு பாலியல் குற்றவாளியாக பார்க்கப்படுகிறார். தனியாக இரண்டு தீவுகளை விலைக்கு வாங்கி சமுதாயத்தில் உயர் நிலையில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரையும் சிறுமிகளுடன் அவர் உல்லாசத்தில் ஈடுபடுத்தியதாக அவரிடத்தில் முன்பே கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டார்..

மேலும் சிறையில் மர்மமான முறையில் உயிர் இருந்தார் ஒரு பக்கம் எப்ஸ்டீன் தொடர்பான பல புகைப்படங்களும், வீடியோக்களும் கடந்த பல நாட்களாகவே சமூக வலைதளங்களில் வெளியாகி உலக அளவில் அதிர்வல்களை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மைக்கேல் ஜாக்சன் என பலரும் அந்த ஆவணங்களில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் பிரிட்டன் இளவரசர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டர்ன் விண்ட்செர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் பிரிட்டன் வர்த்தக தூதராக பணியாற்றிய போது ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு  ரகசிய ஆவணங்களை பகிர்ந்ததாக இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..