1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai highcourt order about temple land encroachments

அதிகார வரம்பை மீறி உத்தரவு: பட்டியலின ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் கண்டனம்

highcourt
கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த பட்டியலின ஆணையம் பிறப்பித்த உத்தரவு அந்த ஆணையத்தின் அதிகார வரம்பை மீறி உள்ளதாகவும் இவ்வாறு ஒரு உத்தரவு எப்படி பிறப்பித்தது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது தேசிய பட்டியலின ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பட்டியலின ஆணையம் அதிகார வரம்பை மீறி எப்படி இந்த உத்தரவை பிறப்பித்தது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
”ராம்.. ராம்.. சொன்னாதான் பிஸ்கட்!” நாய்க்கு பயிற்சி தரும் பாஜக எம்.எல்.ஏ! – வைரல் வீடியோ!