1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai high court order about corruption

அதிகாரிகளுக்கு பயத்தை காட்டாமல் ஊழலை ஒழிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை
அதிகாரிகளுக்கு பயத்தை காட்டாமல் ஊழலை ஒழிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
 
அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அதிகாரிகளுக்கு பயத்தை காட்டாமல் அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க முடியாது என்றும் லஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு எதிரான அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால் தான் லஞ்சம் அதிகரித்து உள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
மேலும் அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடைமுறைகளை வகுப்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
2 ஆண்டுகளில் திமுக சாதித்தது என்ன? – 3 நாள் விளக்க பொதுக்கூட்டம்!