1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 1 மே 2023 (07:11 IST)

சிலிண்டர் விலை ரூ.171 குறைவு என அறிவிப்பு.. ஆனாலும் இல்லத்தரசிகள் அதிருப்தி..!

gas cylinder
சென்னையில் ரூ.171 சிலிண்டர் விலை குறைவு என்ற அறிவிப்பு வெளியான நிலையில் இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
 
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மே ஒன்றாம் தேதி முதல் ரூ.171 குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து ரூ.2192.50 என இருந்த வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2021.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் ரூபாய் 1118.50 என விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva