ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 1 மே 2023 (10:58 IST)

சென்னையின் பல இடங்களில் மழை.. குளிர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி..!

சென்னையின் பல பகுதிகளில் தற்போது மழை பெறுவதை அடுத்து கோடை காலத்தில் குளிர்ச்சியை மக்கள் உணர்ந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது கோடை மழை பெய்து குளிர்வித்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில் தற்போது சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மந்தவெளி, வடபழனி, கோடம்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை உள்பட சென்னை முக்கிய பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. 
 
கடந்த சில நாட்களாக கடும் வெப்பநிலை இருந்து வந்த நிலையில் மழை பெய்துள்ளது சற்று குளிர்ச்சியை தந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva