திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 மே 2023 (14:35 IST)

விசில் போடா? பல்தான்ஸா? க்ரேட் ரிவால்ரி டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு!

MS Dhoni
ஐபிஎல் போட்டிகளிலேயே மிகவும் உற்சாகமாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியின் 16வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. லீக் போட்டியில் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே தடுமாற்றம் கண்டு வருகிறது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அடுத்தடுத்து வெற்றி பெற தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி வரும் 6ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் மோதல் ஐபிஎல்லின் முக்கியமான இரு அணிகளுக்கிடையேயான போர் அளவிற்கு பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தியது. இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள இந்த போட்டியில் சென்னையை அதன் ஹோம் க்ரவுண்டில் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தி பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு மும்பை ரசிகர்களுக்கு உள்ளது.

இந்த க்ரேட் ரிவால்ரி போட்டிக்கான டிக்கெட்டுகள் மே 3ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.