தொடர்புடைய செய்திகள்
- திடீரென தீப்பற்றி எறிந்த அண்ணா சாலை சிக்னல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
- திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தர்வு
- 10,11 ம் தேதிகளில் தமிழகத்தில் அதிகனமழை! – வானிலை ஆய்வு மையம்!
- தயாநிதி மாறன் & கனிமொழி மீதான அவதூறு வழக்குகள் ரத்து!
- வெள்ளத்தில் தவித்த கர்ப்பிணி பெண்; விரைந்து மீட்ட போலீஸார்! – குவியும் பாராட்டுகள்!
மழை வெள்ளத்திலும் இப்படி கொண்டாட்டமா? – வியாசர்பாடி சப்வேயில் டைவ் அடிக்கும் இளைஞர்கள்!
சென்னையில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளத்தில் சிறுவர்கள் விளையாடும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பல பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பத்திரமாக முகாம்களுக்கு காவல்துறையினர், மீட்பு படையினர் அழைத்து சென்றுள்ளனர்.
சென்னையின் பல சுரங்க பாதைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே மழை வெள்ளத்தில் சிலர் விளையாடுவதும் வைரலாகி வருகிறது. வியாசர்பாடி சப்வேயில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் அங்குள்ள சிறுவர்கள், இளைஞர்கள் பாலத்தின் மீதிருந்து வெள்ளநீரில் டைவ் அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Vyasarpadi - Subway ! #ChennaiRain pic.twitter.com/vSeRXEMOwu
— Jeeva Bharathi (@sjeeva26) November 7, 2021
அடுத்த கட்டுரையில்
