ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (10:52 IST)

வெள்ளத்தில் தவித்த கர்ப்பிணி பெண்; விரைந்து மீட்ட போலீஸார்! – குவியும் பாராட்டுகள்!

சென்னையில் தொடர் மழையால் பல பகுதிகள் வெள்ளம் சூழப்பட்டிருக்கும் நிலையில் கர்ப்பிணி பெண்ணை போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பல பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பத்திரமாக முகாம்களுக்கு காவல்துறையினர், மீட்பு படையினர் அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் வேளச்சேரி சராகத்திற்குட்பட்ட ஏஜிஎஸ் காலனியில் 3 அடிக்கும் மேல் மழைநீர் சூழ்ந்து வீடுகளை மூழ்கடித்துள்ளது. அங்குள்ள சொக்கலிங்கம் நகர் பகுதியில் முதல் தளத்தில் வசித்த 9 மாத கர்ப்பிணி ஜெயந்தியை போலீஸார் பத்திரமாக மீட்டு படகு மூலம் அழைத்து சென்று அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் சிக்கித்தவித்த 50க்கும் மேற்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். போலீஸார் மக்களை மீட்ட வீடியோவை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.