திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 நவம்பர் 2021 (12:52 IST)

தயாநிதி மாறன் & கனிமொழி மீதான அவதூறு வழக்குகள் ரத்து!

திமுக முன்னணித் தலைவர்களான தயாநிதிமாறன் மற்றும் கனிமொழி ஆகியவர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மீது முந்தைய அதிமுக அரசு அவதூறு வழக்குகளை தொடுத்தது. அதை ரத்து செய்ய சொல்லி மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதையடுத்து வழக்கை ஏற்று நீதிமன்றம் விசாரித்த போது அரசு சார்பில் அவதூறு வழக்குகளை திரும்ப பெறுவதாகக் கூறியதை அடுத்து சம்மந்தப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.