1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu Rain alert

10,11 ம் தேதிகளில் தமிழகத்தில் அதிகனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் எதிர்வரும் 10,11 ம் தேதிகளில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தமிழகத்தில் எதிர்வரும் 10 மற்றும் 11ம் தேதியன்று அதி கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். அன்று பல இடங்களில் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட தற்போதைய நிலவரப்படி 40 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தீபாவளிக்கு மகள் வீட்டுக்கு சென்ற பெண்… 130 பவுன் நகைக் கொள்ளை!