1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (13:36 IST)

திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தர்வு

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது 
 
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. 100 சதவீத பார்வையாளர்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது