வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 7 அக்டோபர் 2023 (09:33 IST)

சேப்பாக்கம் மைதானத்தில் ஊழியர் உயிரிழப்பு.. நாளை போட்டி நடக்க இருக்கும் நிலையில் விபரீதம்

Chepauk
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற இருக்கும் நிலையில் இன்று அந்த மைதானத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கும் நிலையில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் வெல்டிங் பணியில் ஈடுபட்டு வந்த 52 வயது முருகன் என்ற ஊழியர் எதிர்பாராத விதமாக பணியில் இருந்த போது தவறி கீழே விழுந்தார். 14 அடி உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்ததாகவும் கீழே விழுந்த ஒரு சில நொடிகளில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.  

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெல்டிங் மேற்பார்வையாளர் மகேந்திர பாபு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

14 அடி உயரத்தில் வெல்டிங் பணியில் நடந்து கொண்டிருக்கும் போது எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடு இன்றி பணி செய்ய வைத்தது குற்றம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 நாளை உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்று சென்னை மைதானத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran