1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk flag used by ops case in court

அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ஓபிஎஸ்
அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வம் தரப்பினருக்குத் தடை கோரி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த வழக்கு தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என  எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுக கட்சியிலிருந்து ஓ பன்னீர்செல்வத்தை  நீக்கிய தீர்மானம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்ததால் இந்த வழக்கை நீதிபதி 
நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு மனுவுக்கு அக்டோபர் 6-ம் தேதிக்குள்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இன்று இரவு 15 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்