1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai highcourt order about sanathanam case

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர்களின் பேச்சு.. சென்னைஐகோர்ட் முக்கிய உத்தரவு

சனாதனம்
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. ராசாவுக்கு எதிராக கோ வாரண்டோ வழக்கு தொடர்ந்த நிலையில் அமைச்சர்களின் பேச்சுக்கு ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. ராசா பேசிய நிலையில், கிஷோர்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அரசியல் காரணத்துக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது - அமைச்சர் உதயநிதி தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார். மேலும் ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.
 
இதனையடுத்து ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததோடு, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
குடிநீர் தொட்டியில் புழுக்கள்.. மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தர்ணா போராட்டம்..!