52 கோவில்களில் செல்போனுக்கு தடை!.. இன்று முதல் கெடுபிடி!....
தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கும் பக்தர்கள் செல்போனை எடுத்துச் சென்று அங்கு புகைப்படம், வீடியோ எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பல கோவில்களில் புனித தன்மை மற்றும் ஆன்மீக சூழலை பாதுகாக்கும் பொருட்டு செல்போன் கொண்டு படுவதற்கு தடை இருக்கிறது..
ஆனாலும் சில கோவில்களில் பக்தர்கள் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. இதையடுத்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் 52 முதல் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் செல்போனை கொண்டு செல்லப்படுவதற்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்..
இன்று முதல் அந்த தடை அமலுக்கு வந்திருக்கிறது. கோவிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் தங்களது செல்போனை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு போக பாதுகாப்பு பெட்டக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ரூ.5 கட்டணம் செலுத்தி பக்தர்கள் அங்கே செல்போனை வைத்துவிட்டு செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவி,ல் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களுக்குள் இனிமேல் செல்போன் கொண்டு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.