விஜய் பிரதமரா?.. இது செம காமெடி!.. டிடிவி தினகரன் நக்கல்....
அடுத்த பிரதமர் யார் என்கிற கேள்வியோடு சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவில் நரேந்திர மோடிக்கு 48.7 சதவீத மக்களும், ராகுல் காந்திக்கு 27.1 சதவீத ஆதரவும் கிடைத்த நிலையில் ஆச்சரியம் கொடுக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் விஜய்க்கு 9.2 சதவீதம் பேர் ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இது வட இந்திய ஊடகங்களிலும் பெரிதாக விவாதிக்கப்பட்டது. ஒருபக்கம் தவெகவினரும், தவெக அமைச்சர்கள் விஜய்தான் அடுத்த பிரதமர் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.. ஆனால் விஜய்க்கு அந்த எண்ணம் இல்லை.. இந்தியா கூட்டணியை பொறுத்தவரை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். எனவே அமைச்சர்களையும், தவெகவினரையும் முதல்வர் விஜய் கட்டுப்படுத்த வேண்டும் என சமீபத்தில் வைகோ கூறியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த டிடிவி தினகரன் விஜய் பிரதமராவார் என்பது 2026ம் வருடத்தின் மிகச்சிறந்த காமெடி.. இந்த ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ரில்ஸ் வீடியோக்களை பகிர்ந்து இளைஞர்களையும், பெண்களையும் கவர்ந்து ஏமாற்றியே தவெக ஆட்சிக்கு வந்திருக்கிறது.. பொய்யான வாக்குறுதி கொடுத்துதான் அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். தற்போதும் ரீல்ஸ் மூலம் பொய் சொல்லி ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. நான் பொதுவாக நான் கருத்துக்கணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.