1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. people will get some noise in cellphone today

செல்போனில் அதிக சவுண்டு வந்தா பீதியாக வேண்டாம்!.. பொதுமக்களுக்கு பேரிடர் மேலான்மை ஆணையம் தகவல்!...

sound
கடந்த பல வருடங்களாகவே மக்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இப்போதெல்லாம் ஏழைகளிடம் கூட ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதில் அவர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போட்ட சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். யூடியூப் வீடியோ பார்க்கிறார்கள்.

செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டது ஒரு தொழில் ரீதியான வளர்ச்சியாக பார்க்கப்பட்டாலும் அதையே பயன்படுத்தி பல மோசடிகளும் நடக்கிறது. பலரும் பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். நிறைய சைபர் கிரைம் குற்றங்கள் நடக்கின்றன. ஆன்லைனில் மோசடி செய்து பொது மக்களை ஏமாற்றி பணம் பறித்து விடுகிறார்கள்.. இதைதடுப்பதற்காக இந்திய அரசு தொடர்ந்து செல்போனில் குறுஞ்செய்திகளை மக்களுக்கு அனுப்பி எச்சரித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொது மக்களிடம் அவசர கால எச்சரிக்கை சோதனை செய்யவிருக்கிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் ‘ நாடு முழுவதும் செல் ஒளிபரப்பு எச்சரிக்கை அமைப்பின் சோதனை இன்று காலை 11.15 முதல் மதியம் 12:15 மணி வரை நடைபெறும். அந்த நேரத்தில் செல்போனில் அதிக அதிர்வு கூடிய எச்சரிக்கை சத்தம் வந்தால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை’ என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
சத்யராஜ் பொண்ணு ஒரு பைத்தியம்!.. நாத்திகம் புல்லு புடுங்கப் போச்சா!.. பயில்வான் ரங்கநாதன் கோபம்..