1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mobile Phones Banned in 52 Major Tamil Nadu Temples from September 1

தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் செல்பொன்களுக்கு அனுமதி இல்லை.. 52 கோயில்களின் முழு பட்டியல்...

temple
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கும் 52  திருக்கோயில்களில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்போன்களை எடுத்துச் செல்லும் நடைமுறைக்கு இன்று முதல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று அதாவ்து செப்டம்பர் 1 முதல் இந்த புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
 
கோயில்களின் புனிதத்தன்மையையும் அமைதியான ஆன்மிக சூழலையும் பாதுகாக்கும் நோக்கில், ஏற்கெனவே கோயில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு பல இடங்களில் கட்டுப்பாடுகள் இருந்தன. இருந்தபோதிலும், சிலர் கோயில்களுக்குள் புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன.
 
இதையடுத்து, 52 திருக்கோயில்களிலும் பக்தர்கள் செல்போனை உள்ளே கொண்டு செல்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.  அந்த கோயில்களின் பட்டியல் இதோ:
 
* மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
 
* திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில்
 
* சென்னை வடபழனி ஆண்டவா் கோயில்
 
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில்
 
* திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில்
 
* குன்றத்தூர் முருகன் கோயில்
 
* மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்
 
* பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்
 
* வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில்
 
* காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்
 
* காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
 
* காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
 
* திருவள்ளூர் வீரராகவர் கோயில்
 
* திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்
 
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
 
* பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
 
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
 
* திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்
 
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்
 
* திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்
 
* ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
 
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
 
* சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில்
 
* மதுரை கள்ளழகர் கோயில்
 
* கோவை கோனியம்மன் கோயில்
 
* சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்
 
* ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில்
 
* தென்காசி திருமலை குமாரசாமி கோயில்
 
* சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில்
 
* கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில்
 
* திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில்
 
* சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்
 
* பவானி சங்கமேஸ்வரர் கோயில்
 
* தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்
 
* தென்காசி திருக்குற்றாலநாத சுவாமி கோயில்
 
* வடலூர் சத்யஞான சபை – வள்ளலார் தெய்வநிலையம்
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
100 நாள் தவெக ஆட்சி!.. திமுக செயல்பாடு எப்படி இருக்கு?!.. வெளியான கருத்துக்கணிப்பு!...