1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Updated : திங்கள், 19 ஜனவரி 2026 (12:12 IST)

விஜயிடம் அடுக்கடுக்கான கேள்விகள்!.. குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர்?!. சிபிஐ அதிரடி...

vijay
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளை நேரில் வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும் நேரில் ஆஜராக வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பியிருந்தனர். இதை ஏற்று கடந்த 13ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அதன்பின் இன்றும் அவர் டெல்லியில் உள்ள சிபிஐ விசாரணையில் ஆஜராகியிருக்கிறார். இன்றும் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக 7 மணி நேர தாமதம் ஏன்?, அவ்வளவு கூட்டத்தில் ஏன் உள்ளே போனீர்கள்?.. நெரிசல் அபாயம் பற்றி எப்போது உணர்ந்தீர்கள்?.. அபாயத்தை தடுக்க என்ன முயற்சி எடுத்தீர்கள்?.. பிரச்சார வாகனத்தின் மீது நின்றுகொண்டிருந்தபோது அபாயத்தை நீங்கள் உணரவே இல்லையா?... என்பது போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.

பிப்ரவரி முதல் அல்லது 2 வது வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில் குற்றப்பத்திரிக்கையில் விஜயின் பெயரையும் சேர்க்க சிபிஐ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.