வியாழன், 12 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : ஞாயிறு, 18 ஜனவரி 2026 (13:22 IST)

சிபிஐ விசாரணை!.. மீண்டும் டெல்லி செல்லும் தவெக தலைவர் விஜய்!...

vijay
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி பிரச்சாரத்திற்காக கரூருக்கு சென்றார். ஆனால், அவர் மிகவும் தாமதமாக போனதால் அவரைப் பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தாவெகவை ஒரு மாத காலம் முடக்கிப்போட்டது. விஜய் கூட இரண்டு மாதங்கள் வெளியே வரவில்லை. ஒரு பக்கம் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கடந்த சில மாதங்களாகவே விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இந்த விசாரணை தீவிரம் அடைந்திருக்கிறது. ஏற்கனவே தவெகவில் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை டெல்லிகு நேரில் வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதேபோல் தவெக தலைவர் விஜய்க்கும் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். இதை ஏற்று சில நாட்களுக்கு முன்பு விஜய் டெல்லி சென்று விசாரணையில் ஆஜரானார். சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.

சிபிஐ விசாரணை அடுத்த நாளும் நீடிக்கும் எதிர்பார்த்த நிலையில் பொங்கல் முடிந்து மீண்டும் விசாரணைக்கு வருகிறேன் என விஜய் சொன்னதை ஏற்று அவரை சிபிஐ அதிகாரிகள் விடுவித்தனர். இந்நிலையில், இன்று மாலை மீண்டும் டெல்லி செல்கிறார் விஜய். எனவே, நாளை காலை மீண்டும் அவர் சிபிஐ விசாரணையில் ஆஜராவார் எனத் தெரிகிறது.