விஜய் ஒரு தொடை நடுங்கி!.. போட்டு பொளந்த ஜேம்ஸ் வசந்தன்...
விஜய் பொதுவாகவே அமைதியான சுபாவம் கொண்டவர். அதிகம் பேச மாட்டார்.. தனிமை விரும்பி.. ஆனால் அவர் அரசியலுக்கு வந்திருப்பதுதான் ஆச்சர்யம்.. பேசி பேசி நாட்டை பிடித்த நாடு தமிழ்நாடு.. அப்படிப்பட்ட நாட்டில் அரசியலுக்கு வந்துவிட்டு அதிகம் பேசாமலேயே அரசியல் செய்து வருகிறார் தவெக தலைவர் விஜய்.
பல முக்கிய பிரச்சினைகளுக்கும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார் விஜய்.. இது பலரையும் கோபப்படுத்தி வருகிறது.. அவரின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சனையில் சிக்கியதால் படம் வெளியாகவில்லை.
இது விஜய் ரசிகர்களை கடுமையாக கோபப்படுத்தியிருக்கிறது. இதற்கு பின்னல் அரசியல் காரணம் இருப்பதாக அவர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட விஜய் இதுவரை எதுவும் பேசவில்லை.. படம் வரும்வரை பொருத்திருங்கள் என ஒரு சின்ன அறிக்கையாவது விட்டிருக்கலாம்.. ஆனால், விஜய் அதை செய்யவில்லை. தற்போது சிபிஐ விசாரணையில் இருப்பதால் ஒன்றிய அரசை பகைத்துக்கொள்ள வேண்டாம் என விஜய் நினைப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய போது விஜய் ஒரு கோழை.. வலிமை இல்லாத ஒரு தொடை நடுங்கி.. எல்லோரையும் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது என்ன மாதிரியான கேவலமான மனப்பான்மை.. அவருடைய படம் வரலன்னு அவரது ரசிகர்கள் எல்லாம் கொந்தளிச்சிட்டு இருக்கான்.. அவனுக்கு ஆறுதல் சொல்லவாவது வாயை திறக்கணும் என்று பொங்கியிருக்கிறார்.