1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Calf with two head born in pudhukottai

2 தலையுடன் பிறந்த அதிசய கன்று – உயிர்பிழைக்குமா ?

கன்று குட்டி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே விவசாயியின் மாடு ஒன்று இரண்டு தலையுள்ள கன்றை ஈன்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  மீனவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜா எனும் விவசாயி. சினையாக இருந்த இவரது மாடு இன்று காலை கன்று ஈன்றுள்ளது. ஆனால் அந்த கன்றை பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போயுள்ளனர். பிறந்த கன்று 4 கண்கள், 2 வாய், 2 மூக்குகளுடன் இருந்துள்ளது.

பொதுவாக இதுபோல பிறக்கும் கன்றுகள் பிறந்தவுடன் இறந்துவிடும். ஆனால் இந்த கன்றுக்கு உடலசைவுகள் இருந்ததால் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டுள்ளார். கன்றை பரிசோதித்த அவர் கன்றின் உடலில் அசைவுகள் இருந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். அதற்குள் இந்த செய்தி பரவ பொதுமக்கள் வந்து அந்த கன்றை பார்த்து சென்றனர்.
அடுத்த கட்டுரையில்
போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட ரஜினி, கமல், விஜய்யின் ஆண்டு வருமானம்...